ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்பு ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
01.01.2020 க்கு முன்னர் ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியங்கள், பொது நிர்வாக சுற்றறிக்கை எண் 1 இன் படி, 2020 ஆம் ஆண்டுக்கு பொருந்தக்கூடிய சம்பள அளவுகளின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக திருத்தப்படும் என தெரிவித்தார்.
அத்துடன், மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்க 15000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளதாக என்றும் அநுர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முதியோர்களுக்கான உதவித்தொகை கொடுப்பனவை ரூ.3,000 இல் இருந்து ரூ.5,000ஆக உயர்த்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)