ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
Government Employee
Sri Lankan Peoples
vehicle imports sri lanka
By Dilakshan
ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு கட்டணச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த சலுகையானது, 60 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்களுக்கே வழங்கப்படவுள்ளது.
கட்டாய ஓய்வு வயது 65 ஆக நீடிக்கப்பட்டு, பின்னர் 60 ஆக குறைக்கப்பட்டதால், அந்தக் காலகட்டத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.
தீர்மானம்
இந்த தீர்மானமானது, கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன (Pradeep Yasaratne) வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி