கனடா செல்ல உள்ளவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
அடுத்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஐந்து லட்சம் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்க கனடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.
கனடிய மக்கள் எதிர்கொள்ளும் வீட்டுப்பிரச்சினை
எனினும் கனடிய மக்கள் தற்போது எதிர்கொள்ளும் வீட்டுப்பிரச்சினைகள் காரணமாக குடியேறுவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு அமைச்சர் சீன் ப்றேசர் மற்றும் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
குடிவரவு தொடர்பிலான ஒழுங்குபடுத்தல்கள்
ஆண்டு தோறும் அரசாங்கம் வீட்டுப் பிரச்சினை குறித்த சவால்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குடிவரவு தொடர்பிலான ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |