வற் வரியிலிருந்து தப்பிய பொருட்கள் (முழுமையான விபரம் இதோ)
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (11) 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
இதற்கமைய தற்போது 15 சதவீதமாக அறவிடப்படும் பெறுமதி சேர் வரியானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் பெருமளவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கவுள்ள நிலையில் வற்வரியிலிருந்து விலக்கு அளிக்ப்பட்ட பொருட்களின் விபரம் வெளியாகி உள்ளது.
கோதுமை மற்றும் கோதுமை மா
கோதுமை மற்றும் கோதுமை மா, குழந்தை பால்மா, அரிசி, அரிசி மாவு மற்றும் பாண் ஆகியவை பெறுமதி சேர் வரி அதிகரிப்புக்கு உட்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் மின்சார விநியோகம், கச்சா எண்ணெய், மண்ணெண்ணெய், அழகுசாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், ஆகியவற்றுக்கும் பெறுமதி சேர் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், செயற்கை உறுப்புகள் மற்றும் காது கேட்கும் கருவிகளுக்கும் பெறுமதி சேர் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா போக்குவரத்து வாகனங்கள்
மருத்துவமனை அறைக் கட்டணம் தவிர மருத்துவமனை பராமரிப்பு சேவைகள், இரசாயன உரங்கள் தவிர மற்ற உரங்கள் மற்றும் கைத்தறி ஜவுளிகளுக்கு பெறுமதி சேர் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டெக்ஸி வகைகள் மற்றும் சுற்றுலா போக்குவரத்து வாகனங்கள், பொது போக்குவரத்து சேவைகளும் பெறுமதி சேர் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |