கூகுள் CEO சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு...! எவ்வளவு தெரியுமா
கூகுள் (Google) நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் 1.1 பில்லியன் (இந்திய மதிப்பில் 9 ஆயிரம் கோடி ரூபா) டொலராக உயர்ந்து உள்ளது.
ப்ளூம் பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை (Sundar pichai) இந்த பதவிக்கு வந்து தற்போது அவர் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
நிறுவனத்தின் சந்தை மதிப்பு
சுந்தர் பிச்சை பொறுப்பேற்றது முதல் தற்போது வரை கூகுள் நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.
அத்துடன் 2023 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டொலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 86.5 இலட்சம் கோடி) அதிகமான உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த பிரமாண்ட வளர்ச்சி சுந்தர் பிச்சையை பில்லியனர் அந்தஸ்துக்கு உயர்த்தி உள்ளது.
மிகப்பெரிய கோடீஸ்வரர் பட்டியல்
மேலும் போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலும் சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு 1.2 பில்லியன் ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மிகப்பெரிய கோடீஸ்வரர் பட்டியில் சுந்தர் பிச்சை இடம் பிடித்து உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
