பிரபல வர்த்தகரிடமும், பிள்ளையானிடமும் கெஞ்சித்திரியும் மட்டக்களப்பு கைப்பிள்ளை!
கட்சியும், கொள்கையும் மாறுவது என்பது இந்த மட்டக்களப்புக் (Batticaloa) கைப்பிள்ளைக்குப் புதிதல்ல.
தமிழ் தேசியம் பேசி தமிழரசுக் கட்சியில் போட்டிபோட்டு வெற்றிபெற்ற கைப்பிள்ளை, நல்லாட்சிக் கவிழ்ப்பின்போது மகிந்தவுடன் போய்நின்று தமிழ் தேசியத்தை விலைபேசினார்.
அதுவும் கைப்பிள்ளையை தமிழ் தேசிய அமைப்புக்கள் கனடாவுக்கும், பிரித்தானியாவுக்கும் அழைத்து தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய ஈரம் காயும் முன்னரேயே, அங்கிருந்து திரும்பவந்து விமான நிலையத்தில் இறங்கியதும் நேரடியாகவே மகிந்தவின் வீடுதேடிச்சென்று, அந்த ஆட்சிக்கவிழ்ப்பில் தனது கொள்கையை அடமாணம் வைத்தார்.
மகிந்தவின் கைப்பிள்ளையாக அரை அமைச்சர், இராஜாங்க அமைச்சர் என்று ஒரு சுற்று வலம்வந்த அவர், மகிந்தவின் மவுசு குறைந்ததும் அப்படியே பல்டி அடித்து ரணிலின் தீவிர ஆதரவாளராக மாறினார். ரணில்தான் தேசியத் தலைவர் என்கின்ற ரோஞ்சுக்கொல்லாம் நரம்பு புடைக்க அடித்தொண்டையில் பேசினார்.
‘குடுக்குற காசுக்கு மேலாகக் கூவுவது’ என்பார்களே.. வெவ்வேறு தேர்தல் மேடைகளில் இந்தக் கைப்பிள்ளை மூச்சுமுட்டக் கூவுவதைப் பார்த்தால் அதன் அர்த்தம் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.
இந்தக் கைப்பிள்ளையின் பதிவிக்காலத்தில் இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள்.
இவரின் வீட்டில் ஒரு படுகொலை நடந்துள்ளது. மணல் கொள்ளை சம்பந்தமாக நடந்த படுகொலை என்று மக்கள் பேசிக்கொள்கின்றார்கள்.
அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் இலஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.
அதேபோன்று இவரது சொந்தச் சகோதரனும் இலஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.
ஆனாலும், திரைப்படத்தில் வருகின்ற கைப்பிள்ளை வடிவேல் போலவே எந்தவித மானமோ ரோசமோ இல்லாமல் மறுபடியும் மறுபடியும் மக்களிடம் வாக்குக் கேட்கவருகின்றார் என்றால் அது மட்டக்களப்பு மக்களை அவர் இளிச்சவாயர்கள் என்று நினைப்பதனால்தான் என்று மக்கள் பேசிக்கொள்கின்றார்கள்.
நேற்றைக்குவரைக்கும் பிள்ளையானை திட்டித்திரிந்த இந்தக் கைப்பிள்ளை, இப்பொழுது பிள்ளையானுடன் இணைந்து தேர்தலில் போட்டிபோட வாயைப் பிழந்துகொண்டு நாயாக அலைவதாக செய்தி வருகின்றது.
'இப்படியான இழவுபிடித்த ஒரு ஊழல் பேர்வழியையும் சேர்த்துக்கொண்டு போட்டிபோட்டால் கிடைகிற வோட்டும் கிடைக்காது..' என்று ஆலேசனை கூறுகின்றார்களாம் பிள்ளையானின் கட்சி உறுப்பினர்கள்.
மட்டக்களப்பில் உள்ள ஒரு கிறிஸ்தர அமைப்பு மூலம் அணுரவுக்கும் தூதுவிட்டுப் பார்த்தராம். இவர் போன்ற ஊழல் பேர்வழிகள் வாசலுக்கும் வரக்கூடாது என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்களாம்.
கடைசியில் தாஜ் சமுத்திரா ஐந்து நட்சத்திரவிடுதியில் வந்து தங்கியிருந்து அரசியல் செய்துவருகின்ற ஒரு தமிழ் தொழிலதிபரின் கால்களில் விழுந்து, புரண்டு ஏதாவது தேறுமா என்று பார்திருக்கின்றார்.
கைப்பிள்ளையின் வீரதீரசாகசங்களையெல்லாம் அந்த தொழிலதிபருக்கு எடுத்துச்சொன்ன அவரது உதவியாளர்கள், ‘இது கொஞ்சமும் தேறாத கேஸ். சும்மா பேசினாலே சனியன் தொற்றிக்கொண்டுவிடும்.. வீனாகத் தூக்கிச் சட்டைப்பைக்குள் போட்டுவிடவேண்டாம்..’ என்று ஆலேசனை கூறியிருக்கின்றார்கள்.
யார் கைவிட்டாலும் சரி.. யார் என்னசொன்னாலும் சரி.. தேர்தலில் நின்று 'மட்டக்களப்பை சீரழித்தே திருவேன்' என்று வெட்கமே இல்லாமல் கங்கணம் கட்டி களத்தில் இறங்கியிருக்கின்றாராம் அந்தக் கைப்பிள்ளை.
(பி.கு: கைப்பிள்ளை என்று இங்கு நாங்கள் குறிப்பிட்டிருப்பது மட்டக்களப்பின் முன்னாள் அரை அமைச்சர் வியாழேந்திரனை அல்ல. நீங்கள் அப்படி நினைத்துக்கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |