என்னை மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள் - மஹிந்த கஹந்தகமவின் போராட்ட அனுபவம்
``மருத்துவமனையில் கொண்டு சென்று என்னை சேர்த்து விடுங்கள்'' என மொட்டு கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஒரு வருடத்திற்கு முன்னர் நடந்த போராட்ட அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருது தெரிவித்த போதே அவர் இதை தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த அவர்,
போராட்டம் ஒரு சதி
'இங்கே பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
போராளிகள் என்னைத் தாக்கியபோது அடிபட்ட பிறகு நடித்து உயிரைக் காப்பாற்றினேன்.
"என்னை வைத்தியசாலையில் அனுமதியுங்கள்" அதுவே எனது அப்போதைய அரசியல் கோசமாக இருந்தது.
போராடுபவர்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். அவர்கள் வந்ததால் நான் அவர்களுக்கு ஆதரவாக வருகை தந்தேன்.
இந்த போராட்டம் ஒரு சதி.போராடும் மக்களுக்கு அந்த சதி தெரியாமல், தலைமை இல்லாமல் வேறு தேவைகளுக்காக போராடிக்கொண்டிருந்தார்கள்.
ரணில் விக்ரமசிங்க
அதனால் தான் போராட்டம் இப்படி ஆனது. ஒரு வருட முடிவில், போராடுபவர்களுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
போராட்டத்தால் தான் ரணில் விக்ரமசிங்க அதிபராகினார். நான் இப்போது பிரபலமாக உள்ளேன்.
இன்று எனது படத்தை வைத்து கேக் செய்தேன். என்னால் அரசியல் செய்ய முடியும்.
கொழும்பில் தேர்தலில் முதல் வேட்பாளராக இருப்பேன். நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன்." என தெரிவித்தார்.
