கோட்டாபய -ரணில் அரசை தூக்கியெறிந்த மகா சங்கம் - வெளிவந்த தகவல்
கோட்டாபய- ரணில் அரசு மீது நம்பிக்கை இழப்பு
நாட்டின் நெருக்கடி நிலைமைகளுக்கு சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதே தீர்வு என மகாநாயக்கர்கள் கருதுவதாக தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார,
கோட்டாபய மற்றும் ரணிலின் மீதும் மீது மகாசங்கத்தினர் நம்பிக்கையிழந்துவிட்டனர் எனவும், கோட்டா – ரணில் அரசாங்கத்தினை மகாநாயக்கர்கள் நிராகரித்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கமே முழுக்க முழுக்க பொறுப்பு
ஆனால் மகாசங்கத்தினரைப் பற்றி கவலைப்படாத, கருத்திற் கொள்ளாத அரசாங்கமாக இது இருக்கிறது. வரிசைகளில் இருந்த இருபதுக்கும் மேற்பட்டோர் இன்று இறந்திருக்கிறார்கள். அதற்கு இந்த அரசாங்கமே முழுக்க முழுக்க பொறுப்புக்கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 7 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்