மகிந்தவினால் உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்ட பணம் : வசந்த முதலிகே கேள்வி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் உகண்டாவில் பதுக்கி வைத்ததாக கூறப்பட்ட நிதிகளை மீட்டெடுத்து நாட்டை வளப்படுத்துவோம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்ததாக மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று அவ்வாறான எந்த மாற்றமும் இடம்பெறவில்லை, அந்தப் பணம் எங்கே என்று தெரியவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு - மஹரகம நகரில் மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று (13) இடம்பெற்ற போராட்டத்தில் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
இதன்போது, வாழ்க்கைச் சுமையை தாங்க முடியவில்லை; அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்ற கோசங்கள் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் “வாழ்க்கைச் சுமையை தாங்க முடியாது”, ” பொருட்கள் விலை, எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம், வரிச்சுமை என்பவற்றை உடனடியாக குறைத்திடு” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |