சிறிலங்கா காவல்துறையில் நந்திக்கொடி! காவற்துறை அதிகாரத்தின் முதற்சுழியா... சுழிப்பா....
யாழ்ப்பாணம் - கோப்பாயில் இன்று (14) காவல் நிலையத்தின் புதிய கட்டிடம் ஒன்று சிறிலங்கா காவற்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியாவால் திறந்து வைக்கபட்டபோது அந்தநிலையத்தின் முன்றலில் ஏற்றப்பட்ட ஒரு கொடி அசாதாரண அவதானத்தை பெற்றுள்ளது.
அந்த கொடியில் சிறிலங்கா காவற்துறையின் வழமையான சின்னத்துடன் நந்தியின் சின்னமும் யாழ்ப்பாணப்பிரிவு என்ற வாக்கியங்களும் இடம்பெற்றிருந்தன.
இதுவரை யாழ்ப்பாண காவல்துறை பிரிவுக்கு என ஒரு கொடி பகிரங்கமாக காட்டப்படாத நிலையில் யாழ்ப்பாண இராச்சியத்தின் பண்டைய வரலாற்றுடன் தொடர்புடைய நந்தியுடன் ஒரு வடிவமைப்பு காட்சிப்படுத்தப்பட்டமை இதுதான் தமிழர்களுக்குரிய காவற்துறை அதிகாரம் என காட்டப்படுகிறதா?
இந்த விடயத்துக்கு அப்பால் தற்பெருமை மற்றும் தன்னகங்கார மனநிலை கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பிறந்தநாளான இன்று ஈரானுடனான டீல் ஒப்பமிடப்படவேண்டும் என அடம்பிடிக்கின்ற நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |