சலேவிடமிருந்து வாக்குமூலம் பெறுவது மட்டும் போதாது! அரசாங்கத்திடம் கோரிக்கை
ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி என அறியப்படும் சுரேஷ் சலேவிடமிருந்து வாக்குமூலம் பெறுவது மட்டும் போதாது என்று இலங்கை மக்கள் தொழிலாளர் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்றையதினம்(12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய சமீர பெரேரா, தேசியப் பாதுகாப்பைச் சூதாடி, நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை அழிக்கப் பணியாற்றிய சுரேஷ் சலே போன்ற ஒரு நபர் தொடர்ந்து சுதந்திரமாக இருப்பது நாட்டிற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அபாயகரமான நபராக சலே
அத்தோடு, கடந்த அரசாங்கங்களின் கீழ் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கி வளர்த்து, தேசியப் பாதுகாப்பை அழிப்பதன் மூலம் நாடுகளுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்தப் பணியாற்றிய ஒரு அபாயகரமான நபராக சுரேஷ் சலே கருதப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், சந்தேக நபரான சுரேஷ் சலேவிடமிருந்து பாதுகாப்புப் படைகள் வெறுமனே வாக்குமூலங்களைப் பெறுவது மட்டும் போதாது என்றும், இது தொடர்பாக ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சமீர பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |