சட்டவிரோத வைத்தியசாலையை இடித்து அகற்றுங்கள் : யாழ். இராணுவ தளபதிக்கு பறந்த கடிதம்

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna Law and Order
By Independent Writer Jun 14, 2026 07:26 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வயாவிளான் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்படும் இராணுவ வைத்தியசாலையினை இடித்து அகற்றுமாறு யாழ் இராணுவ தளபதிக்கு வலி வடக்கு பிரதேசபை தலைவர் சோ.சுகிர்தன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 16.06.2026 ஆம் திகதிக்குள் குறித்த வைத்தியசாலையை அகற்றாவிட்டால் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அந்த கடிதத்தின் ஊடாக எச்சரித்துள்ளார்.

இது குறித்து வலி வடக்கு பிரதேசபை தலைவரால் அனுப்பப்பட்ட கடிதத்தில், யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தைச் சேர்ந்த, பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகிய Major General KTP De Silva நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவு 8J, 28A இற்கமைவாக அனுமதியைப் பெறாதும் அங்கீகாரமின்றியும் அத்துமீறி தமக்குச் சொந்தமான ஆதனங்களினுள் வைத்தியசாலைக் கட்டிடம் அமைத்து வருவதாக ஆதன உரிமையாளர்கள் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

 நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் 

வயாவிளான் எனும் முகவரியில் அங்கீகாரமின்றி தங்களால் கட்டப்பட்ட கட்டிடத்தை 16.06.2026 ஆம் திகதிக்குள் உடன் இடித்தகற்றி ஆதனத்தினை பழைய நிலையில் விடுமாறும், அல்லது கட்டுமானப்பணியினை உடன் நிறுத்தி நிபந்தனைகளுக்கமைவாக அனுமதியினை பெறுமாறு கோரப்படுகிறீர்கள்.

சட்டவிரோத வைத்தியசாலையை இடித்து அகற்றுங்கள் : யாழ். இராணுவ தளபதிக்கு பறந்த கடிதம் | Request To Remove Illegal Military Hospital Jaffna

16.06.2026 ஆம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக அங்கீகாரமின்றி தங்களால் கட்டப்பட்ட கட்டிடப் பகுதியானது அகற்றப்படுவதற்கும், அகற்றப்படுவதற்குரிய செலவினையும் தங்களிடமிருந்து பெற்று கொள்வதற்குமான கட்டளையொன்றினைப் பெறுவதற்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுமென்றும் தங்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகின்றது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். மயிலிட்டியில் வெடிக்க உள்ள போராட்டம் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

யாழ். மயிலிட்டியில் வெடிக்க உள்ள போராட்டம் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாயமாக்கப்படும் சட்டம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாயமாக்கப்படும் சட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி