கோட்டா - மகிந்த அரசாங்கம் தரமான தரகர் நிறுவனம் - வெளிவரும் கடும் குற்றச்சாட்டு

gotabaya mahinda rajapaksha govermant broker
By Sumithiran Aug 03, 2021 11:35 AM GMT
Report

கோட்டா-மஹிந்த தலைமையிலான அரசாங்கமானது அரச சொத்துக்களையும் பெறுமதிமிக்க காணிகளையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்ற தரமான தரகர் நிறுவனமாகியுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் ஒவ்வொரு பிரஜைகளினதும் தனிநபர் கடன் அளவு ஒன்றரை இலட்சம் ரூபாவால் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய அவர், ஸ்ரீலங்கா தற்போதுவரை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை பட்டியலிட்டார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்று சில பொருளாதார பதிவுகளை மாற்றி திரிபுபடுத்திக் கூறுகின்றது. இன்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் போதுமான பணம் அரசாங்கத்திடம் இருப்பதாகக் கூறினாலும் அது முற்றிலும் பொய்யான பிரசாரமாகும். பொருளாதார நெருக்கடி விடயத்தை மக்கள் முன்பாக அரசாங்கம் உண்மையான விம்பத்தை முன்வைப்பதில்லை.

1961 பில்லியன் ரூபாவை ஸ்ரீலங்கா அரசாங்கம் வருடவருமானமாக எதிர்பார்த்தாலும் ஏப்ரல்வரை 482 பில்லியனே கிடைத்துள்ளது. 676 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடனாக செலுத்தப்பட்டது. வெளிநாட்டுக் கடனை செலுத்தமுடியாதபடி ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் வங்குரோத்தடைந்துள்ளது. இதுவரை இறக்குமதி கட்டுப்பாட்டை அரசாங்கம் செய்தாலும் அதுவும் வெற்றியளிக்கவில்லை.

ஸ்ரீலங்கா இன்று மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கியுள்ளது. 13 ரில்லியன் வரையான கடன் கடந்த வருடம்வரை இருந்தது. ஆனால் இந்த வருடத்தில் 3 இலட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபா வரை அதிகரித்துள்ளது. தனிநபர் கடன் ஒன்றரை இலட்சம் ரூபாவில் அதிகரித்துள்ளது. முழு நாட்டுக் கடனிலும் 47 வீதமானவை வெளிநாட்டுக் கடன்களாக உள்ளது.

வருகின்ற ஜனவரியில் 500 மில்லியன் டொலர்களும், ஏப்ரலில் மேலும் 700 மில்லியன் டொலர்களும் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஜுலை மாதம் 27ஆம் திகதிக்குப் பின்னர் இருப்பிலுள்ள அந்நிய செலாவணி அளவு என்ன என்பதை தெரிவிக்க மறுக்கின்றது. ஒட்டுமொத்த திறைசேரியே கடன்பட்டுவிட்டது. பங்களாதேஷிடம் இருந்து அந்நிய செலாவணியான 200 மில்லியன் டொலர் மாற்றீடும், இந்தியாவிடத்திலிருந்து ஒருதொகை டொலர்களும் கிடைக்கவுள்ளன.

ஆனால் அவை இன்றுவரை உறுதியாகவில்லை. இந்நிலையில் கடன்மேல் கடன்பெற்று கடன்களை செலுத்த முடியாத நாடாக ஸ்ரீலங்கா மாறிவருகின்றது. அரச நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் கடந்த 4 மாதங்களில் 270 பில்லியன் நட்டத்தை அடைந்துள்ளன. ஆனால் இன்று ஆசிரியர்கள், அதிபர்கள் கேட்கின்ற 56 பில்லியனை ஒதுக்கமுடியாத நிலைமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

ஆகவே தற்போது ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்று இந்த உண்மையை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஊழல் மோசடிகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீலங்கா அரசாங்கம் அரச சொத்துக்களையும் காணிகளையும் விற்பனை செய்கின்ற சிறந்த தரகராக மாறிவிட்டது என மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி