கோட்டாபயவும் ரணிலும் பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதி: மருத்துவ நிபுணர்கள் சங்கம் தகவல்
உடனடியாக பதவி விலக வேண்டும்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொது மக்கள், சிவில் அமைப்புகள், தொழில்முறை அமைப்புகள் மற்றும் அரசியல் குழுக்களுக்கான திறந்த கடிதம் என தலைப்பிடப்பட்டு நேற்று முன்தினம்(5) வெளியிட்ட கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அண்மையில் இடம்பெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் எடுத்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச பயனுள்ள திட்டம்
மேலும் இந்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியில் இருந்து நமது நாட்டை மீட்டெடுக்க ஒரு பொதுவான குறைந்தபட்ச பயனுள்ள திட்டம் கோட்டாபயவும் ரணிலும் பதவி விலகுவதாகத்தான் இருக்க முடியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்படுவதற்கு முன்னர், அதற்கான நடைமுறை தீர்வைக் காண அரசாங்கத்தை வழிநடத்துவது நாட்டின் அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும் என்று நாங்கள் கருதுகிறோம். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

