நாடு திரும்புகின்றார் கோட்டாபய ராஜபக்ச..! பரபரப்பில் தென்னிலங்கை
Gotabaya Rajapaksa
Sri Lanka
Singapore
Sri Lanka Anti-Govt Protest
By Kanna
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, தாய்லாந்திலிருந்து நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ச, நாடு திரும்பும் பட்சத்தில், முன்னாள் அதிபர் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து விதமான சிறப்புரிமைகளும் வழங்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பிற்போடப்பட்ட பயணம்
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச கடந்த மாதம் 24ம் திகதி நாடு திரும்பவிருந்ததாக அவரது உறவினரும், ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தார்.
எனினும், சில காரணங்களினால் அவரது பயணம் பிற்போடப்பட்டதாகவும், செப்டம்பர் மாதத்தில் அவர் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறியிருந்தார்.
இது போன்ற விரிவான செய்திகளை காண்பதற்கு முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்

