திண்டாட்டத்தில் இலங்கை!! அரச தலைவர் எடுத்துள்ள சபதம்
மத்திய வங்கிக்கு வழங்கப்பட்ட முழு சுதந்திரம்
மத்திய வங்கியின் பங்களிப்பை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவையும் சுதந்திரத்தையும் வழங்கும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்று உறுதியளித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நாணயச் சபை உறுப்பினர் சஞ்சீவ ஜயவர்தன ஆகியோருடன் இன்று (28) காலை கொழும்பு கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அரச தலைவர் இதனைத் தெரிவித்தார்.
குறுகிய காலத்திற்குள் நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தணிக்கவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அரச தலைவர் இந்த சந்திப்பின் போத பாராட்டினார்.
வெற்றிகரமான முன்னேற்றத்தில் வேலைத்திட்டங்கள்
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாடி பொருளாதாரத் துறையில் நிபுணர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமான முன்னேற்றம் கண்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் எடுக்கப்பட்ட செயல் திட்டத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதன் மூலம் தற்போதைய சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதேவேளை, எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் உதவுவதாக அரச தலைவர் தெரிவித்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
