சிங்கப்பூரில் கோட்டாபயவின் ஆடம்பரம்! செலவு செய்த பெரும் தொகை
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை விடுதிக்கான கட்டணமாக செலுத்தியதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்சவும் கடந்த 11 ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சேண்ட்ஸ் விடுதியில் தங்கியிருந்தனர்.
இதேவேளை, விடுதி தங்குமிட கட்டணமான 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவரான நிஸ்ஸங்க சேனாதிபதி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்தில் கோட்டாபயவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை
எவ்வாறாயினும், தற்போது தாய்லாந்தில் உள்ள கோட்டாபய ராஜபக்ச, அந்நாட்டிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு தாய்லாந்து அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தங்கியிருக்கும் விடுதி வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து காவல்துறையினர் அவருக்கு உத்தரவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டிருந்தன.
தொடர்புடைய செய்தி, வெளியே தலைகாட்டக் கூடாது! கோட்டாபயவுக்கு நிபந்தனை விதித்த தாய்லாந்து