மீண்டும் கோட்டாபய! அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவு
எரிவாயு ஏற்றுமதி இன்று பிற்பகல் நாட்டிற்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரச தலைவர் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவர் மாளிகை, அரச தலைவர் செயலகம் என்பன போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் அரச தலைவர் கோட்டாபய எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது இராஜினாமா செய்வதாக அறிவித்த கோட்டாபய எரிவாயுவை உடனடியாக விநியோகம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடடத்தக்கது.
நாடு வரும் எரிவாயு கப்பல்
இதேவேளை, 3 ஆயிரத்து 700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று பிற்பகல் 3 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக அந்த கப்பல் இலங்கையை வந்தடைய தாமதமாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி, எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு! இலங்கைக்கு வரும் 30000 மெற்றிக் தொன் எரிவாயு


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 9 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்