'பொய்யான தகவல்களை கூற வேண்டாம்' கோட்டாபய கடும் தொனியில் பதில்
பெருந்தோட்ட தொழிலாளர்கள் சிலர் இன்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை சுற்றிவளைத்து கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதன்போது உரப்பிரச்சினை குறித்து வாக்குவாதம் இடம்பெற்றதுடன், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அரச தலைவர் கூறியுள்ளார்.
எனினும் கோபமடைந்த மக்கள் அரச தலைவரிடம் எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளனர். தினசரி 500 கிலோ கிராம் கொழுந்து பறித்த நாங்கள் தற்போது 200 கிலோ கிராம் மாத்திரமே பறிக்கின்றோம். உரமின்மையால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம் என மக்கள் அரச தலைவரிடம் முறையிட்டனர்.
இதற்கு பதில் கொடுத்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, கொஞ்சம் இருங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள். எவ்வளவு காலம் இலவசமாக உரம் வழங்கப்பட்டது? இதற்கு தகவல் கூறுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இலவசமாக கொடுத்தவைகள் இருக்கட்டும். நியாயமான விலையில் தற்போது எங்களுக்கு உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கூறியுள்ளனர்.
இதற்கு, பொய் கூறாதீர்கள். இரண்டு வருடங்கள் உரத்தை இலவசமாக வழங்கியிருக்கின்றாம். அப்படி என்றால் எவ்வாறு கொழுந்து வளர்ச்சி குறைவடையும். பொய்யான தகவல்களை கூற வேண்டாம் என அரச தலைவர் கடும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த மக்கள் நாங்கள் பொய் கூற வில்லை, இரண்டு பங்கு கொழுந்தில் ஒரு பங்கு குறைவடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
