கோட்டாபயவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு திகதி வெளியீடு! சூடு பிடிக்கும் அரசியல் களம்
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
President of Sri lanka
By Kiruththikan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிரான நெதர்லாந்தின் ஹேக் நகரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் 20ம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டே லீடர் பத்திரிக்கையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மகள் அஹிம்சா விக்ரமதுங்கவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தற்போது சுவிஸ் வசிக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நிஷாந்த சில்வா சாட்சியமளித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்