மீண்டும் சிறிலங்காவின் அரசியலில் ஈடுபடுவாரா கோட்டாபய..! வெளியாகியுள்ள தகவல்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரைச் சந்திக்கப் போகும் அரசியல்வாதிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கூட ஆர்வம் காட்டவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர்
அவருடனான உரையாடல்களில் அரசியல் இல்லாமல் பொதுவான தகவல்கள் மட்டுமே இடம்பெறுவதாகவும், அவர் அரசியலுக்கு வருவது குறித்து சில வருத்தங்கள் இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தியுள்ளார்.
ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கும் வலைப்பந்து மகளர் அணிக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,

