அரச தலைவருக்கு பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ச ஆதரவு!
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவளித்துவருவதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ச ( Milinda Rajapaksha) தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த நெருக்கடியை பொதுமக்கள் அனைவரும் சேர்ந்தே வெல்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் இடம்பெற்றுவரும் பொருளாதார நெருக்கடியில் அநேகமான அரசியல்வாதிகள் தமது ஆதரவை அரசதலைவரிற்கு வழங்கிவருகின்றனர். இந்நிலையில், இப்பொருளாதார நெருக்கடியைத் தகர்த்து கோட்டாபய ராஜபக்சவால் அமைதியான ஆட்சியை உருவாக்க முடியும்.
நாங்கள் அனைவரும் ஒன்றாக கொரோனாவை எதிர்த்து வென்றோம். அவ்வாறே இப்பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வு காண்போம். கொரோனா எனும் பெரும் போரை #COVID19SL எனும் ஹேஷ்டேக்குடன் எதிர்த்து நின்றோம். அதேபோன்றே இப்பொருளாதார நெருக்கடியையும் #WeAreWithGota எனும் ஹேஷ்டேக்குடன் எதிர்த்து வெல்வோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சமூக வலைத்தளங்களில் #GoHomeGota எனும் ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளங்களில் மக்கள் பயன்படுத்தி தற்போதைய ஆட்சிக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
