சீன பாதுகாப்பு அமைச்சருக்காக மூடப்பட்ட பாதைகள்! மோசமாக நடந்துகொண்ட நபர்
arrest
police
china
borella
By Shalini
சீன பாதுகாப்பு அமைச்சர் கொழும்புக்கு மோட்டார் வாகன ஊர்வலத்தில் வருகை தந்து கொண்டிருந்தபோது, மோசமாக நடந்துகொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பொரளை பகுதியில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீன பாதுகாப்பு அமைச்சர் செல்வதற்காக பாதை மூடப்பட்டிருந்த நிலையில் அந்த நபர் தமது கைத்தெலைபேசியில் காட்சிகளை பதிவு செய்து, இதற்காகவா வாக்களித்தோம். நன்றாக பாருங்கள், என குரல்பதிவையும் செய்துள்ளார்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய பத்தரமுல்ல பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்