கோட்டாபய - ரணில் அரசை விரட்ட ஒன்றிணையுமாறு அழைப்பு
எரிசக்தி அமைச்சர் செய்ய வேண்டியது
எரி சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இப்போது செய்ய வேண்டிய சிறந்த காரியம் என்னவெனில் அவர் பதவி விலகுவதே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
இன்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்றல்ல நாளை என்று கூறி மக்களுக்கு எப்போதும் உண்மையை மறைக்க முடியாது எனவும் நாட்டு மக்கள் தேவையான ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
கோட்டாபய - ரணில் அரசை விரட்டுவோம்
வேலையிழந்து வீட்டிலேயே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென விஜேசிறி வலியுறுத்தினார்.
தற்போது நாடு மற்றும் உலக நாடுகளின் ஆதரவு இல்லாத ராஜபக்ச - விக்ரமசிங்க அரசாங்கத்தை அகற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
