கோட்டாபயவின் தங்குமிடம் தொடர்பில் எழுந்த சர்ச்சை! முற்றுப்புள்ளி வைத்த கடிதம்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தங்கியிருந்த இடம் தொடர்பான சர்ச்சைக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
அந்தவகையில், சிங்கப்பூரில் வைத்தியர் வோல்டர் ஜயசிங்கவிற்கு சொந்தமான வீட்டுத் தொகுதியில் தங்கியிருந்ததாக கோட்டாபய தரப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சர்வதேச இலங்கை அறக்கட்டளையின் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் அச்சல வீரசிங்க என்ற நபர் இது தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக்கடிதத்தில் வைத்தியர் வோல்டர் ஜயசிங்கவுக்கு சிங்கப்பூரில் வீட்டுத் தொகுதி ஒன்று இல்லை எனவும் கோட்டாபய அங்கு தங்கியிருந்ததாக வெளியாகும் செய்தி உண்மையில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தப்பி ஓடிய கோட்டாபய
ஜூலை 09 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியால் மாலைதீவிற்கு தப்பி ஓடிய கோட்டாபய பின்னர் சிங்கப்பூரிற்கு சென்று தனது அதிபர் பதவியையும் துறந்தார்.
பின்னர் சிங்கப்பூரிலிருந்து 90 நாள் விசா மூலம் தாய்லாந்திற்கு சென்றுள்ளார்.
மேலும், தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள விடுதி ஒன்றில் சிறப்பு படை பாதுகாப்பில் தங்கியிருப்பதாகவும் அங்குள்ள செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்காவிற்கு செல்ல முற்பட்ட கோட்டாபய தற்போது மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

