மிக் விமான மோசடி விவகாரம்...! விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளார்.
மிக்-27 (MiG-27) ரக போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட கொள்முதல் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி முறைகேடு
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதே மிக் விமானக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதியும், மார்ஷல் ஒஃப் தி எயார்போர்ஸ் கௌரவம் பெற்றவருமான ரொஷான் குணதிலக்க நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

FCID வளாகத்திற்குள் நுழையும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் விமானப்படைத் தளபதி, தன்னிடம் விசாரிக்கப்படவுள்ள குறிப்பிட்ட விடயங்கள் குறித்து விசாரணை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னரே கருத்து தெரிவிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மிக்-27 ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்த போது கோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விரிவான மற்றும் தீவிரமான விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடையில் அர்ச்சுனா! நாமலுக்கு ஒத்துழைப்பு என்ற கருத்தோடு வழங்கிய விளக்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |