இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடையில் அர்ச்சுனா! நாமலுக்கு ஒத்துழைப்பு என்ற கருத்தோடு வழங்கிய விளக்கம்
சமூக ஊடகங்களில் தற்போது சிலர், “இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடைகளில் தான் ஏறப்போவதாக” பல்வேறான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்திய அவர், இவ்வாறான வித்தியாசமான பதிவுகள் தொடர்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
சஜித் அழைத்தால் நான் செல்வேன்
நாங்கள் நிற்பது அரசியல் மேடை. சஜித் ஜனாதிபதியாக வந்து தன்னை வருமாறு அழைத்தால் நான் செல்வேன். இதுதான் அரசியல். இது ஒரு பொது எதிர்கட்சி.

எந்த ஒரு எதிர்கட்சி உறுப்பினருக்கும் நான் ஒத்துழைப்பை வழங்குவேன். நாமலும் எனக்கு அவ்வாறேதான்.
அவர் திருடியிருப்பார் என்றால் அவற்றுக்கு நான் துனைபோக மாட்டேன். நான் மேடைகளுக்கு ஏறுவது என மக்கள் சார்பாக.
இனப்படுகொளையாளி மகிந்தவின் மேடைகளில் தான் ஏறப்போவதாக சிலர் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
வடக்கில் தலைவன் இல்லாது இருக்கும் ஒரு சமூகத்திற்காக யாருடன் சென்று அரசியலை கதைக்கலாம்? இது ஒரு அரசியல் மேடை. இது போர் அல்ல.
இந்த அரசியல் மேடையில் அநுர அரசாங்கம் வடக்கு மக்களுக்கு நன்மையை செய்யும் என நம்பிக்கை இல்லை.” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |