கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு! அச்சத்தில் அதிகாரிகள்
வேலை செய்யாத அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலருக்கு பதவி இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சுக்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அக்கறை செலுத்தாமல், ஆதரவு வழங்காமல் இருக்கும் அமைச்சின் செயலாளர்கள், பதில் செயலாளர்கள், நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் இயக்குனர்களை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளார்.
பிரதானிகள் பலர் பயணக்கட்டுப்பாட்டினை பயன்படுத்தி வீட்டில் இருப்பதோடு எவ்வித கடமைகளை செய்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளையும் குறைவின்றி பெற்றுக் கொள்வதாக அமைச்சர்கள் பலர் செய்த முறைப்பாடுகளை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நியமனங்கள் தன்னால் மேற்கொள்ளப்பட்டவைகள் என்றாலும், நாடு மற்றும் அமைச்சர்களின் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் செயற்படாத அனைத்து அதிகாரிகளினதும் தகவல்கள் தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,