கோட்டாபயவுக்கு பிரதமர் பதவியா - முடிவை ரணிலிடம் அறிவித்த பசில்..! வெளியான தகவல்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை நாட்டின் பிரதமராக நியமிக்க மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், குறித்த கட்சியின் பிரிதொரு குழு தினேஷ் குணவர்தன தொடர்ந்தும் பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறி வருவதாக அறியமுடிகிறது.
கோட்டாபய அறிவிப்பொன்றையும் வெளியிடவில்லை
எவ்வாறாயினும், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது தொடர்பில் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடப் போவதில்லை எனவும், மீண்டும் அரசியலில் பிரவேசிப்பது தொடர்பில் அவர் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், வரவு செல்வது திட்டத்திற்கு முன்னர் பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான ஆயுத்தங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்க்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கோரியுள்ளதாவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
ரணிலிடம் முடிவை அறிவித்த பசில்
எவ்வாறாயினும், தினேஷ் குணவர்தனவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் அறிவிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இதேவேளை, பிரசன்ன ரணதுங்கவும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அந்த தகவலை அறிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
