வயலில் கைவிடப்பட்ட குழந்தை: தாயிற்கு அரசு விடுத்துள்ள அறிவிப்பு
குருநாகலில் வயலில் கைவிடப்பட்ட குழந்தையை உரிய தாய் பொறுபேற்க முன்வந்தால் தேவையான வசதிகள் தயார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பவுல்ராஜ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெல் வயல்
குருநாகல் மாவதகம, பரகஹதெனிய, சிங்கபுர வீதி பகுதியில் பகுதியில் உள்ள நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 17 ஆம் திகதி காலை பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, காவல்துறையினரும் மற்றும் உள்ளூர்வாசிகளும் குழந்தையை மாவதகம மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
பின்னர் குழந்தை குருநாகல் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இந்தநிலையில், குழந்தையின் தாயைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் செயலாளர், வளர்ப்பு பெற்றோர் முறைக்கு புதிய சட்டத்தை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
