ஹரினுக்கு கோட்டாபய விடுத்துள்ள எச்சரிக்கை
சுற்றுலாத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ பொறுப்பேற்ற நிலையில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாக்குமாறு அரச தலைவர் கோட்டாபய பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரச தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தெரியவருகிறது.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாத்துக்கொண்டு கருத்துக்களை வெளியிடுமாறு அரச தலைவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அரச தலைவர் இவ்வாறு தெரிவித்த பின்னர் அமைச்சர்கள் பல்வேறு இடங்களில் தெரிவித்த கருத்துக்கள் கடந்த அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் அதிருப்தியடைவதற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் இதன்போது கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.
