கோட்டாபயவின் பதவி பறிபோகும் நாள் - பிரபல சிங்கள சோதிடர் பரபரப்பு தகவல் (காணொலி)
Gotabaya Rajapaksa
Sri Lanka
Sri Lankan political crisis
By Sumithiran
கோட்டாபயவின் பதவி பறிபோகும்
எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இழப்பார் என பிரபல சிங்கள சோதிடர் சரத் சந்திர என்பவர் தெரிவித்துள்ளார்.
இணைய சேவை ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை ஜூலை 09 ஆம் திகதி மற்றும் அன்றைய தினத்துடன் தொடர்புடைய சில நாட்களில் மிகவும் தீவிரமடையும்.
நாட்டில் இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள்
ஜுலை மாதம் 9ஆம் திகதி உட்பட ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டார்.
ஜூலை 12ஆம் திகதிக்கு பின்னர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்