நாடு திரும்பும் கோட்டாபய..! தொடர்புகொண்ட ரணில் விக்ரமசிங்க
முன்னாள் அதிபர்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை அதிபர் ரணில் விக்ரமசிங்க தொடர்பு கொண்டுள்ளார்.
தாய்லாந்தில் வீட்டுக்காவலில் இருக்கும் கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு மீள அழைத்து வருவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது சம்பந்தமாக அதிபர் ரணில் விக்ரமசிங்க, அவரை தொடர்புக்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் போது,விடுத்த கோரிக்கைக்கு அமைய அதிபர் ரணில் விக்ரமசிங்க கோட்டாபய ராஜபக்சவை தொடர்புக்கொண்டுள்ளார் என தகவல் வெளிக்கியுள்ளது.
வெளியேற வேண்டிய கட்டாயத்தில் - கோட்டாபய
தாய்லாந்தில் இருந்து நவம்பர் மாதமளவில் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள கோட்டாபய, அமெரிக்க செல்வதற்கு முயற்சித்தார்.
இருப்பினும், தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்தமையினால் அமெரிக்கா செல்வதற்கு இழுபறி நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் தாய் நாடு திரும்புமாறும் மகிந்த ராஜபக்ச கோட்டபாயவுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் பசில் ராஜபக்ச உட்பட பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் கோட்டபாயவை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருமாறும் முன்னாள் அதிபர் எனும் ரீதியில் அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கமைய முன்னாள் அதிபர் எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகிய போதிலும் ரணில் விக்ரமசிங்க அதனை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.