"ரணில் தவறென கோட்டாபய சொல்வார்" அம்பலமாகும் ரகசிய நகர்வுகள்
பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளதால் சர்வதேச உதவிகள் கிடைக்கும் என்ற மாயைகளை உருவாக்கி, மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். எவ்வாறாயினும் ரணிலை நியமித்தமை தவறென, அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவே இன்னும் சில மாதங்களில் கூறும் நிலை வருமென நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் பழைய அமைச்சரவையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் நடக்கவில்லை. புதிதாக ஹரீனும் மனுஷவும் மட்டுமே இணைந்துள்ளனர்.
இதன் மூலம் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. இப்போது மக்களின் பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. பிரதமர் பதவியேற்றதும் கோதுமை மா 40 ரூபாவினால் அதிகாரித்துள்ளது.
பாண் விலை அதிகரித்துள்ளது. மற்றைய உணவுகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. இந்த இடத்தில் மக்களின் உண்மை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் அவர்களின் போராட்டங்களை நிறுத்த முடியாது.
இப்போது பிரதமராக ரணில் பதவியேற்ற பின்னர் சர்வதேச உதவிகள் கிடைக்கும் என்று கூறி ஏமாற்றுகின்றனர். அவருக்கு அப்படி இருந்திருந்தால் முன்னர் ஆட்சியில் இருந்தவர்தானே இவர். ஏன் அப்போது கடன்களை பெற்று நாட்டை நெருக்கடிக்குள் தள்ளினார்.
இப்போது அமைச்சரவையை அமைத்து பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறுகின்றனர். எப்படியும் இன்னும் சில மாதங்களில் ரணிலை பிரதமராக்கியதும் தவறு என்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கூறுவார்.
இந்த அமைச்சரவையும் தவறு என்று கூறுவார். நிச்சயமாக இன்னும் மூன்று மாதங்களில் பார்ப்போம் இதனை கூறுவார்.என தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
