கோட்டாபயவின் கதியே ரணிலுக்கும் ஏற்படும் - கடும் தொனியில் எச்சரிக்கை
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மக்களாணை இல்லாத காரணத்தினால் ரணில் விக்ரமசிங்க உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார்.
பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட்டால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட கதியே ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ள பின்னணியில் நான் அரசியலில் இருந்து ஓய்வுப் பெற போவதாக ஒரு தரப்பினர் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
2022 மே மாதம் 09 ஆம் திகதி வன்முறை சம்பவத்தின் போது கடுமையான தாக்குதலுக்கு உள்ளானேன். பாரிய போரட்டத்திற்கு மத்தியில் உயிர் பிழைத்தேன். ஆகவே அரசியலில் இருந்து ஓய்வுப் பெற வேண்டிய தேவை தற்போது இல்லை. நாட்டுக்காக தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,