மீண்டும் புத்துயிர் பெறும் கோட்டா கோ கம போராட்டம்
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka
Gota Go Home 2022
By Sumithiran
ஆறு அம்ச செயல் திட்டம்
கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ‘கோட்டா கோ கம’ போராட்ட தளத்தின் பிரதிநிதிகள் 06 அம்ச செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளனர்.
ஜூலை மாதம் வரையப்பட்ட செயல்திட்டம், காலிமுகத்திடலில் நடைபெறும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் எதிர்காலப் போக்கைக் தெரிவித்துள்ளது.
இடைக்கால அரசாங்கம்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலக வேண்டும் என்பது சில முக்கிய கோரிக்கைகளாகும்.
அரச தலைவர் மற்றும் அவரது அரசாங்கம் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கவும் குழு கோருகிறது

