தொழில்துறை திட்டங்களோடு அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும் : சஜித் எடுத்துரைப்பு
வார்த்தைகளால் அல்லாமல் தொழில்துறை திட்டங்களோடு அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (21) கொழும்பு (Colombo) கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற இளம் தொழிற்துறையினர் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “முழு நாட்டின் உரிமையில் நிர்வாக கட்டமைப்புக்குள் உள்ளவர்களுக்கு பூரண உரிமம் வழங்காது அது தற்காலிக உரிமமாக இருக்க வேண்டும்.
தற்காலிக உரிமம்
இந்தத் தற்காலிக உரிமத்தை உயிருக்கும் மேலாக பாதுகாத்து பாதாளத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவத்தை வழங்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டத்தரணி லிஹினி பெர்னாண்டோவின் (Lihini Fernando) நெறியாள்கையில் இடம்பெற்ற கருத்தாடல் அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva), எரான் விக்ரமரத்ன (Eran Wickramaratne), ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) மற்றும் ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க (General Mahesh Senanayake) உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.