அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்தாவிட்டால் ஏற்படப்போகும் பேராபத்து
அரச ஊழியர்களுக்கான சம்பளம் சிறு சிறு தொகையாக அதிகரிக்கப்படுமாக இருந்தால் அது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) மீது அரச ஊழியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என கொழும்பு (Colombo) பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் (K.Amirthalingam) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு என்பது சாதாரணமான விடயம் அல்ல காரணம் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுவதில் சில நன்மைகள் உண்டு.
ஆனால், நினைத்த அளவில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை, சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் பலரும் மகிழ்ச்சி அடைத்திருந்தாலும் அதன் பின்பு அளிக்கப்பட்ட விடயங்களில்தான் அது குறித்த விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசின் மாற்றங்கள், நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரச ஊழியர்கள் சம்பளம் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
