சமையல் எரிவாயு தட்டுப்பாடுக்கு தீர்வு : ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
மாதாந்த அடிப்படையில் 3,000 மெட்ரிக் டன் எரிவாயுவை தேவையுடைய வீடுகளுக்கு, விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
இது தொடர்பில், வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஜனாதிபதி குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
முக்கிய நிறுவனங்கள்
சமையல் எரிவாயு வழங்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான லாஃப்ஸ் எரிவாயுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சமையல் எரிவாயு வழங்குநர் குறைந்தபட்சம் 7,500 மெட்ரிக் டன் எல்பி எரிவாயு இருப்பை கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எரிவாயு தட்டுப்பாடு
உள்நாட்டு சந்தைக்கு LP எரிவாயு தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்ய இது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், 9,000 மெற்றிக் டன் எரிவாயுவை லாஃப்ஸ் எரிவாயு PLC நிறுவனம் அடுத்த மூன்று மாதங்களுக்கு உள்நாட்டு விற்பனைக்கு அனுமதிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி 21 வரை நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |