யாழ் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Jaffna Department of Meteorology Climate Change Weather
By Thulsi Nov 25, 2024 01:04 PM GMT
Report

புதிய இணைப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ரீ. என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் (Jaffna) தாழ் நிலப்பிரதேசங்கள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற கால நிலை காரணமாக நிலவிய மின்னல் தாக்கம் மற்றும் காற்று காரணமாக 27 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடை மழை காரணமாக வெள்ளப்பெருக்கு

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2035 குடும்பங்களை சேர்ந்த 7416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழ் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Today Weather Tamil

அந்தவகையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 288 குடும்பங்களைச் சேர்ந்த 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.

ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 215 குடும்பங்களை சேர்ந்த 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

இடி மின்னல் 

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி மின்னல் தாக்கத்தால் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 21 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Today Weather Tamil

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 574 குடும்பங்களை சேர்ந்த 2341 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முழுமையாகவும், ஒரு வீடு பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளது.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 141 குடும்பங்களை சேர்ந்த 508 பேர் வெள்ள அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 266 குடும்பங்களை சேர்ந்த 932 பேர் பல அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 19 குடும்பங்களை சேர்ந்த 73 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 470 குடும்பங்களை சேர்ந்த 1520 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வாகன இறக்குமதி குறித்து ஐ.எம்.எப் வெளியிட்ட முக்கிய தகவல்

வாகன இறக்குமதி குறித்து ஐ.எம்.எப் வெளியிட்ட முக்கிய தகவல்

செய்திகள் - கஜிந்தன்

முதலாம் இணைப்பு

இதேவேளை, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (24) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

யாழ் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Today Weather Tamil

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும். வடமத்திய மாகாணத்தில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

2024 க.பொ.த உயர்தர பரீட்சையில் உதவி அதிபர்களுக்கு விதிக்கப்பட்ட தடை

2024 க.பொ.த உயர்தர பரீட்சையில் உதவி அதிபர்களுக்கு விதிக்கப்பட்ட தடை

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இதேவேளை, தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Today Weather Tamil

இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வடமேற்கு நோக்கி மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதியை சுற்றி வரும் நவம்பர் 25ஆம் திகதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து நாட்டின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரும் என்று நம்பப்படுகிறது.

இதன் காரணமாக தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் தொடர்ந்தும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  

அநுரவின் புதிய பயணம்: விடுதலை புலிகள் இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்ட நாள்!

அநுரவின் புதிய பயணம்: விடுதலை புலிகள் இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்ட நாள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, திருகோணமலை, Markham, Canada

30 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, அச்சுவேலி, Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, London, United Kingdom

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, கொழும்பு, Montreal, Canada

03 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, பிரான்ஸ், France

01 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

டென்மார்க், Denmark

01 Dec, 2016
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Zürich, Switzerland, Aargau, Switzerland

30 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Castrop-Rauxel, Germany, Dorsten, Germany

26 Nov, 2025
மரண அறிவித்தல்

காரைதீவு, பேர்லின், Germany, Southall, United Kingdom

27 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, கிளிநொச்சி

01 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வண்ணார்பண்ணை

30 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, பிரித்தானியா, United Kingdom

21 Nov, 2025
மரண அறிவித்தல்

ஊரதீவு, Hamilton, Canada, யாழ்ப்பாணம்

29 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

பரிஸ், France, Lieusaint, France

30 Nov, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, இராசாவின் தோட்டம்

28 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

20 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
மரண அறிவித்தல்

வடமராட்சி, Arnsberg, Germany

25 Nov, 2025
50ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Kirchheim Unter Teck, Germany

29 Nov, 2024
மரண அறிவித்தல்

பெரியவிளான், Pinner, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025