யாழ்ப்பாணத்தில் ஆளுநர் செயலகம் முன் ஆரம்பமான போராட்டம்
வடக்கு மாகாண அரச சாரதிகள் தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு (Secretariat of the Governor of Northern Province) முன்பாக இன்று (03) கூடிய அரச சாரதிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கு மாகாணத்தில் கடந்த ஐந்து வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளின் இடமாற்றமானது கடந்த வருடம் பிரதிப் பிரதம செயலாளரினால் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்த போதிலும் ஆளுநரின் கோரிக்கைக்கு இணங்க இடமாற்றம் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
அரச சாரதிகள்
இதனால் ஏமாற்றம் அடைந்த அரச சாரதிகள் கடந்த பெப்ரவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.
போராட்ட ஏற்பாட்டினைத் தொடர்ந்து ஜீன் 1ம் திகதி தொடக்கம் இடைநிறுத்தப்பட்ட இடமாற்றமானது நடைமுறைப்படுத்தப்படுமென எழுத்து மூலமான உறுதி மொழியினை பிரதிப் பிரதம செயலாளர் வழங்கியிருந்தாரென தெரிவித்துள்ளனர்.
சாரதிகள் சங்கத்தினர்
இந்நிலையில், குறித்த திகதியில் இடமாற்றம் நடைமுறைக்கு வராதநிலையில் வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், 7ம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |