காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தை குலைக்க அரசின் கையாட்கள் செய்த வேலை (காணொலி)
Galle Face Protest
Sri Lanka
Gota Go Gama
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
அரச தொலைக்காட்சியான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் புகுந்தது காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்ல என ஜனதா விமுக்தி பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக அரசின் கையாட்கள் தான் ஊடுருவியுள்ளனர் என்றார்.
அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட குழு
கலுமுவடோர மக்கள் மத்தியில் தான் உரையாற்றும் போது, அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட குழுவொன்று தம்மை தாக்க வந்ததாக அவர்கள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
போராட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளை ஏற்க முடியாது என்றும் அவர் கூறுகிறார். இணைய சேவை ஒன்றில் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
