குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான மேல்முறையீடுகள் மற்றும் பொதுமக்களின் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வது இந்த மாதம் 16 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
இதன்படி, இரண்டாம் கட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட 815,556 விண்ணப்பங்களில் 766,508 விண்ணப்பங்கள் எண்ணப்பட்டதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
717,309 விண்ணப்பங்கள் குழு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகவும், 715,146 விண்ணப்பங்கள் பிரதேச செயலாளரின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
கொடுப்பனவு பெற தகுதியான பிரிவு
கொடுப்பனவு பெற தகுதியான பிரிவில் 82,996 மிகவும் ஏழ்மையான குடும்பங்கள், 147,298 ஏழைக் குடும்பங்கள் மற்றும் 69,238 பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் இருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜெயந்த விஜேரத்ன கூறியுள்ளார்.
பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும், புள்ளிவிவரங்கள் முறையே 13,298 மற்றும் 13,018 என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் குறைந்த விண்ணப்பங்கள்
அத்துடன், நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான ஏழைக் குடும்பங்கள் பதிவாகியுள்ளதாகவும், எண்ணிக்கை முறையே 15,105 மற்றும் 14,496 எனவும் விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மிகவும் ஏழ்மையான மற்றும் ஏழை குடும்பங்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் (59,079) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மன்னார் மாவட்டத்தில் இருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் (3493) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
