சொன்னதைச் செய்யாத அரசாங்கம் எதற்கு? மக்களைப் பட்டினி போடவா?? ரிசாத் காட்டம் (காணொளி)
மக்களுடைய வாழ்க்கைப் போராட்டம் மிகவும் கஷ்டமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
தற்போது அத்தியவசியப் பொருட்களின் எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புத்தளம் - தம்பபண்ணி ஆப்தீன் அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துது் தெரிவிக்கையில்,
அரசாங்கம் கூறியது உலக சந்தையிலே பெற்றோலிய பொருட்களின் விலக் குறைந்த பொழுது ஒருபோதும் நாங்கள் விலையைக் குறைக்க மாட்டோம் அதேபோன்று எதிர்காலத்திலே நாங்கள் அதிகரிக்கவும் மாட்டோமம் என்றனர். இந்த அமைச்சரே அதைக் கூறினார்.
ஆனால் இன்று இரண்டாவது முறையாக மீண்டும் பெற்றோலுடைய விலையை அதிகரிப்பதற்கு கோரப்பட்டுள்ளது. பெற்றோல் மாத்திரமல்ல டீசல் மற்றும் மண்ணெண்ணை போன்றவற்றின் விலையை அதிகரிப்பது என்பது எல்லாப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்குச் சமனானது.
எனவே மக்களுடைய வாழ்க்கை போராட்டம் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. அத்தியவசியப் பொருட்களின் எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
பேக்கரி உற்பத்தியும் இன்று அதிகரிப்பதாக அறிவித்துருக்கிரார்கள். இந்த அரசாங்கத்தைப் பொருத்தவகையிலே விலைக் கட்டுப்பாடு இல்லாமல் வியாபாரிகள் விலையைத் தீர்மாணிக்கின்ற நிலையை நாங்கள் காண்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
