இலங்கையில் வரி தொடர்பில் புதிய திட்டம்..! வெளியாகிய முக்கிய அறிவித்தல்

Sri Lanka Sri Lankan Peoples
By Kiruththikan Feb 10, 2023 08:08 AM GMT
Report

இலங்கையில் ஜனவரி மாதத்தில் அதிகரித்த வரிப்பணம் வெட்டப்பட்டிருப்பின் அதை இந்த மாதத்தில் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உழைக்கும் போதே செலுத்தும் வரி குறைக்கப்பட்டதால் ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மையை, இந்த மாதத்திலேயே பெற்றுக் கொடுக்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் முடிவு செய்துள்ளது.

இதன்படி ஜனவரி மாதத்தில், அதிகளவு வரிப்பணம் வெட்டப்பட்டிருந்தால், இந்த மாதத்தில் செலுத்தப்பட வேண்டிய வரியிலிருந்து அதனைக் குறைப்பதற்கும் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வரி திருத்தம்

இலங்கையில் வரி தொடர்பில் புதிய திட்டம்..! வெளியாகிய முக்கிய அறிவித்தல் | Government Employee Staffs Salary Government Tax

மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகப் பெற்றுக் கொள்ளும் ஊழியர்களிடமிருந்து அறவிடும் வரியை திருத்தம் செய்ததால், இந்த நன்மையை அவர்களுக்கு பெப்ரவரி மாதத்தில் பெற்றுக் கொடுப்பதே திணைக்களத்தின் கருத்தாக உள்ளது.

உதாரணமாக ஜனவரி மாதத்தில் 1,000 ரூபா மேலதிகமாக செலுத்தியிருந்தால், பெப்ரவரி மாதத்தில் செலுத்த வேண்டியது பத்தாயிரம் ரூபாவாக இருந்தால் இந்த மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் அறவிடப்படுமென திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

முதலாளிகளால் வழங்கப்படும் குடியிருப்பு கொடுப்பனவு , உத்தியோகபூர்வ இல்லம், போக்குவரத்து வசதி, தொடர்பாடல் வசதி, தொலைபேசி கட்டண கொடுப்பனவு உள்ளிட்ட பல பிரிவுகளுக்காக புதிய வரித்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நிறுவனம் ஒன்று ஊழியர் ஒருவருக்கு வாகனமொன்றை பெற்று கொடுக்கும் போது, எஞ்சின் கொள்ளளவுக்கு அமைய 50,000 ரூபா அல்லது 75,000 ரூபா வரியாக செலுத்த வேண்டியிருந்தது.

கொடுப்பனவு

இலங்கையில் வரி தொடர்பில் புதிய திட்டம்..! வெளியாகிய முக்கிய அறிவித்தல் | Government Employee Staffs Salary Government Tax

ஆனால், புதிய திருத்தத்தின்படி என்ஜின் கொள்ளளவை கருத்தில் கொள்ளாது, வாகன கொடுப்பனவு 20,000 ரூபா, சாரதிக்கான கொடுப்பனவு 10,000 ரூபா மற்றும் எரிபொருளுக்கு 24,000 ரூபா வரிக்கு உட்படுத்தப்படும்.

ஊழியர் ஒருவரின் தனிப்பட்ட வாகனத்தை நிறுவனம் உபயோகப்படுத்துமானால் அவருக்கு வழங்கப்படும் எரிபொருள், சாரதி மற்றும் வாகனத்துக்கான கொடுப்பனவில் 100% முன்னர் வரிக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் புதிய திருத்தத்தின்படி அந்த வரியை செலுத்த வேண்டியது கொடுப்பனவின் 25 வீதத்திற்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்