சம்பளம் வழங்க அரசிடம் பணமில்லை- வங்கி அமைப்பு கடும் ஆபத்தில் -வெளியான எச்சரிக்கை
இழுத்தடிக்கப்பட்ட சம்பளம்
இலங்கையில் உள்ள பல அரச நிறுவனங்களில் கடந்த 23ஆம் திகதி மாதாந்த சம்பளத்தை வழங்க முடியாமல் 26-27ஆம் திகதி வரை இழுத்தடிக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு பணத்தை அச்சிட வேண்டாம் என அறிவித்தமையே இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பளம் கொடுக்க கடன்
இந்த சூழ்நிலையால், அரசாங்கம் வங்கி அமைப்புகள்,காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் ஊழியர் சேம இலாப நிதி போன்ற நிறுவனங்களில் கடன் வாங்கி சம்பளம் கொடுக்கிறது என்கிறார்.
ஒவ்வொரு வார இறுதியிலும் அரசாங்கம் திறைசேரி உண்டியல்களை வெளியிட்டு 200 பில்லியன் ரூபாவை பெறுவதாகவும் அவர் கூறினார்.
மக்கள் விடுதலை முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட கடுவெல தொகுதிக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
