அரச வைத்தியசாலைகள் ஸ்தம்பிக்கும் அபாயம் - வெளியான அதிர்ச்சி தகவல்
அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக சுமார் இரண்டு வாரங்களுக்கு போதுமான மருந்துகளே அந்த வைத்தியசாலைகளில் இருப்பதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்தார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிடின், அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துப் பொருட்களை விநியோகிக்க முடியாவிட்டால், அரச வைத்தியசாலைகளின் மருந்து விநியோகம் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும் எனவும் திலகரத்ன தெரிவித்தார்.
அத்துடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து மருந்துகளையும் வெளியில் இருந்து வாங்க வேண்டும்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், தனியார் மருந்தகங்களுக்கு மருந்துகளை வழங்குவதை கட்டுப்படுத்தியதால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் தனியாரிடமிருந்தும் மருந்துகளை வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
‘‘புற்றுநோய், சிறுநீரக நோய், தலசீமியா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.