மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு இலங்கை அரசின் தலையீடு: எழுந்துள்ள குற்றச்சாட்டு

Mannar Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Dec 09, 2023 08:05 PM GMT
Report

மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு அரசு சம்மந்தப்படுகின்றதா என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் வினவியுள்ளார்.

மன்னாரில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, மன்னார் தீவு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது.

அவற்றில் முக்கியமாக பாரிய மண் அகழ்வு திட்டம் மற்றும் எல்லை மீறிய காற்றாலை கோபுரங்கள் மற்றும் காடழிப்பு போன்றவை காணப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய சட்டம்: அதிகாரங்கள் தொடர்பில் விளக்கம் அளித்த ரணில்

இலங்கை கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய சட்டம்: அதிகாரங்கள் தொடர்பில் விளக்கம் அளித்த ரணில்


விழிப்புணர்வுகள்

தொடர்ந்தும் அவர் கூறுகையில், எனினும் மண் அகழ்வு தொடர்பாக பல்வேறு விடயங்களை முன்வைக்க விரும்புகின்றோம், மண் அகழ்வில் ஈடுபடுகின்ற தொழிற்சாலைகள் சம்மந்தமாக விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு இலங்கை அரசின் தலையீடு: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Government Involved Destruction Mannar Island

குறிப்பாக மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்காக அரச தரப்பில் பல்வேறு முயற்சிகளை கடந்த வருடம் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

ஆனால் அரச தரப்பிடம் இருந்து இது வரை எந்த விதமான பதில்களும் எமக்கு கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் இவ் விடயம் தொடர்பாக வினவிய போதும் விளக்கம் கோரிய போதும் எவ்வித பதிலும் எமக்கு கிடைக்கவில்லை.

மிகப்பெரிய அழிவு

மேலும் மன்னார் பிரதேசச் செயலகத்திடமும் நாங்கள் பல்வேறு விதமான விளக்கங்களை கேட்டிருந்த போதும் எவ்வித பதிலும் எமக்கு வழங்கப்படவில்லை.

மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு இலங்கை அரசின் தலையீடு: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Government Involved Destruction Mannar Island

இவ்விடயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக நாங்கள் தகவல்களை பெற்றுக்கொள்ள அரசை நாடினோம். விளக்கம் கோரி பல்வேறு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன.

ஆனால் இதுவரை அனுப்பப்பட்ட விண்ணப்பங்களுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. மிகப்பெரிய அழிவுக்கு அரசும்,சம்மந்தப்படுகின்றதா? என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும், எங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

அவற்றை தெளிவாக நாங்கள் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். 29.12.2021 அன்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதற்காக விளக்கம் கேட்டு நாங்கள் எழுதி இருந்தோம்” என்றார்.

சகல காவல்நிலையங்களுக்கும் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு

சகல காவல்நிலையங்களுக்கும் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021