அரசாங்கம் நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறது- ஐக்கிய மக்கள் சக்தி
Srilanka
government
Halim
Essential material
By MKkamshan
நாட்டு மக்களுக்கு அரசாங்கம் துரோகம் செய்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹலீம் (Halim) தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருள்களின் விலைகள் விண்ணை தொடுவதாக தெரிவிக்கும் ஹலீம், அரசாங்கம் ஆட்சியிலிருந்து விலக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், முறைமை மாற்றம் ஒன்று எல்லா துறைகளிலும் இடம்பெற்றுள்ளது. எல்லா இடங்களிலும் எரிவாயு அடுப்பு வெடிக்கிறது. எரிபொருள், அத்தியாவசிய பொருள்களின் விலைகள் விண்ணை தொடுமளவு அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை என்றால், அரசாங்கம் ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி