12,000 அரச பணி வெற்றிடங்கள் - அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
Janaka Wakkumbura
Sri Lanka Cabinet
By Vanan
உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றங்களில் தற்போது 12,000 வெற்றிடங்கள் உள்ள நிலையில், இந்த வெற்றிடங்களுக்கு ஏற்ப நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் வக்கும்புர உறுதியளித்துள்ளார்.
தகவல் சேகரிக்கும் பணி
தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் 10,000 நிரந்தரமற்ற ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவை அனுமதி விரைவில் பெற்றுக் கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதில், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுபவர்களும் அடங்குவர்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி